‘காபி’ – பலருக்கும் தெரியாத தகவல்கள்.. வாங்க ப(கு)டிக்கலாம்..

5105

உலக காஃபி தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை ஒரு கப் காஃபியுடன் பார்க்கலாம்.

காலையில் ஒரு கப் காஃபி குடித்தால் தான் பலருக்கு அன்றைய நாளே தொடங்கியது போல் இருக்கும். அப்படி ஒரு ஈர்ப்பு காஃபியின் மேல் பலருக்கும் இருக்கிறது. அது ஃபில்டர் காஃபியாக இருந்தாலும் அல்லது உடனடி தயாரிப்பான இன்ஸ்டெண்ட் காஃபியாக இருந்தாலும் சரி, ஏதோ ஒன்று காலையில் வயற்றுக்குள் சென்றே ஆக வேண்டும் அப்போது தான் பொழுது புலர்ந்ததாகவே தெரியும்.

சரி காஃபியின் மேல் இந்தளவிற்கு ஈர்ப்பு வந்தது எப்படி என்று காஃபி சாப்பிடும் போது நாம் யோசித்தது உண்டா? இல்லை. சரி வாருங்கள் உலக காஃபி தினமான இன்று காஃபியின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காஃபிக்கு என பல வரலாற்று கதைகள் சொல்லப்பட்டாலும் கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாறு தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எத்தியோப்பியாவில் தான் முதன் முதலில் காஃபி பழத்தை சுவைத்திருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து ஏறத்தாழ 15ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதன் பின்னர் மற்ற நாடுகளுக்கு பரவியதாக ஆய்வாளர்களின் கருத்து.

எனினும் இந்தியாவில் காஃபி ஒரு இஸ்லாமிய துறவியின் மூலம் எத்தியோப்பியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதிலிருந்து சுமார் 350 ஆண்டுகளுக்கு காலசக்கரம் பின்நோக்கி நகர்ந்தால் அப்போது நாம் காஃபி விதைப்பை பற்றி பார்த்திருக்கலாம். ஆம், இந்தியாவில் 1670ம் ஆண்டு தான் காஃபி பயிரிடுதல் கர்நாடகாவில் உள்ள சந்திரகிரி மலைத்தொடர்களில் தொடங்கியுள்ளதாக வரலாற்று தெரிவுகளின் ஊடாக அறிய முடிகிறது.

இதன் பின்னர் கேரளா, அடுத்து தமிழ்நாடு, ஆந்திரா என்று பரவியது காஃபி பயிர். காஃபி தயாரிப்பில் உலகளவில் பிரேசில் முதலிடத்திலும், வியட்நாம், இந்தோனேசியா, கொலம்பியா போன்ற நாடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்தியாவில் மொத்த காஃபி உற்பத்தியில் கர்நாடகா 71 சதவீதமும், கேரளா 21சதவீதமும், தமிழகம் 5 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உற்பத்தி செய்கிறது. உலக அளவில் காஃபி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு கிட்டத்தட்ட 5சதவீதம் மட்டுமே.

அதுமட்டுமல்லாது உற்பத்தி செய்யப்படும் காஃபியில் 80 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் மேலதிக தகவல். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பல இடங்களிலும், சேலம் மாவட்டம் ஏற்காடு, கருமாந்துறை, தேனி மாவட்டம் போடி, குமுளி, கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.

உங்களுக்கு ஒரு தகவல் தெரியுமா? இந்தியாவிலேயே காஃபியை தங்கள் அன்றாட உணவோடு அதிகம் எடுத்துக் கொள்ளும் விரும்பி எடுத்துக் கொள்வோர் உள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழகத்திற்கு அடுத்ததாக வடக்கு கர்நாடகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் காஃபி அருந்தும் பழக்கம் இருக்கிறது.

80-20 சயவழை, , 70-30, 60-40 என்ற சயவழை விலும் இன்னும் சொல்லப்போனால் 50-50சயவழை என்று பல விதமான ருசிகளிலும் காஃபியை சிக்கிரியுடன் மிக்சிங் செய்து ருசிப்பது நம்மில் பலருக்கு விருப்பமான ஒன்று.

வீட்டு விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் காஃபி அண்மைக் காலங்களில் ஒரு நீங்கா இடம் பிடித்து வருகின்றது. கொஞ்சம் காஃபியுடன் நிறைய கதை பேசும் போக்கும் இளைஞர்களிடையே வளர்ந்து கொண்டு வருகிறது என்றால் அது மிகையல்ல.

காஃபி ஒரு உற்சாக தரும் பானம் என்பது ப்போலவே காஃபி தோட்டத்தில் வேலை செய்வோரின் வாழ்வும் உற்சாகமாகமாற வேண்டும் என்ற அவர்களது நீண்ட நாள் கோரிக்கை. உலக காஃபி தினமான இன்று ஒரு கப் காஃபி குடிக்கும் நேரம் ஒரு சிறு நொடியாவது இந்த காஃபியின் கதையை அளாவளவுவோமே.

Advertisement