ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!

2231

பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது 5-ஆம் கட்ட தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், அக்டோபர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, உணவகங்கள், தேநீர் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 மணி வரை பார்சல்களில் விற்பனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அமைக்கப்படும் வாரச்சந்தைகள் மட்டும் உரிய நடைமுறைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 100 உள்நாட்டு விமானங்கள் சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, எந்தவிதமான விஷயங்களுக்கு தடை தொடரும் என்று பார்க்கலாம்..

1. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், கடற்கரை ஆகியவற்றிற்கான தடை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. சினிமா படப்பிடிப்புகளை, 100 பேருக்கு மிகாமல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

3. மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை, பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டறியும் அரசாணை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.

4. புறநகர் ரயில் சேவைக்கான தடை நீடிக்கும்.

5. மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், ஊர்வலங்கள் ஆகியவறை நடத்த தடை.

6. பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிப்பு..

Advertisement