“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி

980

கோவை மாவட்டத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில், ஒரே அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததால் ஹோட்டலை போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் மூடினர்.

இதனை எதிர்த்து, ஹோட்டல் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

திருமணமாகாத ஆணும் பெணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை என கூறிய அவர், திருமணமாகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் குற்றமில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த விடுதி மூடப்பட்டபோது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாததல், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of