உன்னாவ் : பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சி.பி.ஐ வாக்குமூலம்

529

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தானநிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் இளம்பெண்ணிடம் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரில் பாரதிய ஜனதாக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்கார் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், அந்தபெண்ணின் உறவினர்கள் சென்ற வாகனத்தின்மீது லாரியால் மோதி கொலை செய்த வழக்கில், எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பிரமாண வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்துறையினரின் விசாரணையில் மர்மமானமுறையில் இறந்துபோனது குறித்தும், திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி கொலை செய்யமுயன்றது குறித்தும் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டபெண்ணின் வாக்குமூலம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement