ஐ.நா. சபை வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..! அடுத்து என்ன நடக்குமோ..?

960

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சர்வதேச  அளவில் கவனம் பெற்றுள்ளது.

நியூயார்க்கில்  ஐநா தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் துஜாரிக், “சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் மரணம் தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இது போன்ற மரணங்கள்  தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.