பெருந்தொற்று தடுப்பூசி.. பேரழிவுமிக்க தோல்வியை சந்திக்க உள்ளோம்.. ஐநா எச்சரிக்கை..

2954

உலகம் முழுவதும், பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு முக்கிய நாடுகள், தங்களது நாட்டு மக்களுக்கே தடுப்பூசி வழங்குவதில் மும்மரம் காட்டி வருகின்றன. இதனால், ஏழை நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் செயற்குழுக் கூட்டம், கடந்த 18-ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவர், உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்க உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், முதலில் எனக்கு தான் தடுப்பூசி என்கிற அணுகுமுறை, நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளும் என்றும், இது தடுப்பூசியின் விலையை அதிகரிக்கும், பதுக்கலை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது போன்ற செயல்களால் பெருந்தொற்று நீண்ட நாட்களுக்கு நம்மிடையே நீடிக்கும் என்றும் டெட்ரோஸ் எச்சரித்தார்.

Advertisement