விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

183

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்தித்து பேசிய பிறகு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இருகட்சியினருக்கும் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையால், கடந்த சிலநாட்களாக விரும்பத்தகாத கருத்துப்பரிமாற்றம் ஏற்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பினரும் இந்த விவாதத்தை பொதுவெளியில் நடத்திக்கொண்டிருப்பதை தாம் சிறிதும் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்து பேட்டியளித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனிமேல், இருகட்சியினரும் கூட்டணி குறித்து கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.