அரசு அதிகாரிகளின் வீடியோ Conference! திடீரென ஓடிய ஆபாசப்படம்!

1631

ராஜஸ்தான் மாநிலத்தில் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை சார்பில் நேற்று உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மைய அறையில் துறை செயலாளர் முக்தா சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 33 மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக தடையிலாமல் சென்று சேர வேண்டும் என்று துறை செயலளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திக்கொண்டிருந்த போது, திடீரென திரையில் சில விநாடிகள் ஆபாசப்படம் ஓடியது.

இதனால், அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே, கூட்டம் நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக்தா சிங் கூறியுள்ளார்.இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of