கொரோனா பீதி – 21 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை

298

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், கைதிகள் கூட்டமாக இருப்பதால், அங்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது.

இதனால், 7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்று வரும் சிறைக்கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவதை மாநில அரசு முடிவு செய்துக்கொள்ளும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உத்தரபிரதேச சிறைகளில் உள்ள 11 ஆயிரம் கைதிகளை அடுத்த 8 வாரங்களுக்கு ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை செய்தது.

சிறைத்துறையின் பரிந்துரைக்கு அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of