அப்படி என்ன தான் செஞ்சாங்க.. 2-வது மனைவியால் கணவனின் விபரீத முடிவு..!

1435

உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜ்பால் சிங்கிற்கு, ஏற்கனவே திருமணம் நடைபெற்று, விவாகரத்தாகியுள்ளது.

இதனால், தனிமையில் வசித்து வந்த அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கணவனை இழந்து தவித்து வந்த விதவைப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்கள் இருவரும் சந்தோஷமாக தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, இருவருக்குமிடையே, கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள செல்போன் டவர் மீது ஏறி, தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அனைவரையும் தேஜ்பால் பதறவைத்துள்ளார்.

மேலும், பொய் வழக்குகளில் தன்னை சிக்க வைக்க மனைவி முயற்சி செய்து வருவதாகவும், போலீசார் என்னை நம்ப மறுக்கிறார்கள் என்றும், தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரிடம் சமரசம் பேசி கீழே அழைத்து வந்தனர்.

மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் கணவன் டவர் மீது ஏறி தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.