கொண்டைய மறந்துட்டேனே.. மிகச்சிறிய ஆதாரம்.. கொலை வழக்கில் சிக்கிய இளைஞர்..

1552

உத்திரபிரதேச மாநிலம் மதுரா பகுதியில் வசித்து வரும் இளைஞர், அங்குள்ள பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த இளைஞரின் தந்தை, தினமும் குடித்து விட்டு, தனது மகளை தாக்குவதாக கூறப்படுகிறது.

சகோதரி தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளாத இளைஞர், தந்தையை இரும்பு ராடால் தாக்கியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளார். பின்னர், கொலைகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்ற வீடியோவை Youtube-ல் பார்த்து, தடயங்களை அழித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களாக தந்தை காணாமல் போனதால், குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, அந்த இளைஞர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

இறுதியில், அவரது செல்போனை ஆய்வு செய்ததில், கொலை குற்றங்கள் தொடர்பான வீடியோ பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரிடம் தங்களது பாணியில் போலீசார் விசாரித்ததும், அவர் உண்மையை ஒத்துக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்தனர்.

Advertisement