“என்ன குழந்தை பிறக்கும்..” கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..!

1008

மனைவி கர்ப்பிணியாக இருந்தால், கணவன்கள் அவர்களை மிகவும் பக்குவமாக பார்த்துக்கொள்வது வழக்கம். ஆனால், மனைவியின் வயிற்றை கிழித்த கொடூரமான சம்பவம் ஒன்று உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் புதான் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இதனால், ஆரம்பத்தில் இருந்தே, அப்பெண்ணின் கணவர் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று, தனது மனைவியின் வயிற்றை கூர்மையான ஆயுதத்தை கொண்டு குத்தி கிழித்திருக்கிறார். வலியால் அப்பெண் அலறி துடித்ததையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கணவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அதில், பிறக்க இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? என்பதை தெரிந்துக்கொள்ளவே, அந்த நபர் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.