போக்குவரத்து விதியை மீறும் காவலர்கள்..! பீதியை கிளப்பிய ஆணையர்..! அதிரடி அறிக்கை..!

295

இந்தியா முழுவதும் மோட்டார் வாகன திருத்தச சட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு விதிமீறலுக்கும் முன்பை விட 10-மடங்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபாராதங்களுக்கு பயந்தே பலரும் தற்போது விதிகளை பின்பற்ற முயன்று வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச போலீஸ் ஆணையர் ஓபி சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

“மாநில போலீசார் அனைவரும் அரசு மற்றும் தனியார் வாகனங்களை ஓட்டும்போது நிச்சயம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

அப்படி விதிகளை மீறும் பட்சத்தில், பொதுமக்களுக்கு விதிக்கப்படும் அபராத்தை விட இரு மடங்கு அதிகமாக விதிக்கப்படும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற சட்டம் இந்தியா முழுவதும் வரவேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of