அமெரிக்கா பொருளாதார தடை, தவறை சரிசெய்து கொள்ளுங்கள் – சீனா எச்சரிக்கை

841

அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை அடுத்து தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள், என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் அதிரடி வரிஉயர்வு காரணமாக சீனாவும், இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா பதிலடி நடவடிக்கை எடுத்து வருகிறது, அமெரிக்காவின் நடவடிக்கையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை கொள்கையை மீறுவதாகும்.

இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும் நடவடிக்கை என சீனா தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் மீதான பொருளாதார தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of