இந்திய ரூபாயை தனது ”கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்” இருந்து நீக்க அமெரிக்கா முடிவு

946

கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட்டுள்ளதற்கான நடவடிக்கையை டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எடுத்து உள்ளது.

கடந்த சில நாட்களாக, இந்திய ரூபாய் வரிசையாக குறைந்து கொண்டே வந்தது. மிக முக்கியமாக ஜிஎஸ்டி வந்த பின் இந்திய ரூபாய் மதிப்பு பல பொருளாதார பின்விளைவுகள் காரணமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. மிக முக்கியமாக கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாய் மதிப்பு அடிக்கடி 73 ரூபாயை தாண்டி சென்று கொண்டுள்ளது.

இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது ”கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்” இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது. இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை பார்ப்போம் என்றும் அதற்குள் ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்தியாவின் ரூபாயை நீக்கிவிடுவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of