இணையதள பயன்பாட்டை சொல்லுங்க! இல்லைனா..,- அமெரிக்காவின் அதிரடி திட்டம்!

812

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களை தங்களது நாசவேலைக்கான ஆள்சேர்க்கும் மையமாக மாற்றி வருகின்றனர்.

இதை கவனித்த அரசு தங்கள் நாட்டில் குடியேறவும் தங்கவும் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கணக்கு (ஐ.டி.) விபரங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்னும் புதிய கட்டுப்பாட்டை கொண்டுவர கடந்த ஆண்டு திட்டமிட்டது.

இந்நிலையில், இனி விசா கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் தங்களைப்பற்றிய தகவல்களுடன் தாங்கள் உபயோகிக்கும் சமூக வலைத்தளங்களின் விபரங்கள் மற்றும் அவற்றில் எந்த அடையாளப் பெயருடன் (ஐ.டி.) அவர்களின் பயன்பாடு அமைந்துள்ளது என்பன உள்ளிட்ட விபரங்களையும் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை நேற்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement