அங்கும் குவியும் குப்பை ! கவலையில் அமெரிக்கா ?

349

மிஷன் சக்தி சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்தது பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும்.

அதேசமயம், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது. விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சோதனை வடிவமைக்கப்பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம்.

தாழ்வான வளிமண்டலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதால், விண்வெளியில் குப்பைகள் சேராது என்றும், உடைந்து சிதறிய செயற்கைக் கோள் குப்பைகள் சில வாரங்களில் பூமியில் வந்து விழும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of