ஆபாச வீடியோக்களை பார்க்க அடையாள அட்டை! அமலாகிறது புதிய சட்டம்!

1799

இந்தியாவில் மத்திய அரசு ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை பார்க்க முடியாத வண்ணம் தடை செய்துள்ளது. இருந்தாலும் சிலர் அதிகாரப்பூர்வமில்லாத ஆப்களை கொண்டு அந்த வெப்சைட்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரிட்டனில் இது போன்ற ஆபாச வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்கள் அதை பார்ப்பவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வயதை உறுதி செய்வது என்றால் வெறும் பிறந்த தேதியை குறிப்பிடுவதோ அல்லது 18 வயதை கடந்தவன் என டிக்மார்க் செய்வதோ அல்லாமல் அவர்களின் பாஸ்போர்ட், கிரிடிட்கார்டு, டிஜிட்டல் ஐடி ஆகியவற்றை பயன்படுத்தி வயதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் அரசு இந்த சட்டத்தை நடைமுறைபடுத்த வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. 18 வயதுக்கு குறைவானர்களுக்கு இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த வெப்சைட்களை எளிதாக அணுகமுடிகிறது இதை தடுக்க இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

இந்த நடைமுறையை வரும் ஜூலை 15ம் தேதிக்கு பிறகு பின்பற்றாத ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளங்கள் பிரிட்டனில் முடக்கம் செய்யப்படும் என்றும் பிரிட்டன் மீடியா அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஆபாச வலைதளங்களால் சிறியோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்தியாவுக்கும் உடனடியாக இதுபோன்ற சட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of