நீட் தேர்வு ஆள்மாறாட்டம்..! உதித் சூர்யாவின் தந்தைக்கு விழுந்த இரண்டாவது இடி..!

525

மருத்துவப் படிப்பு படிப்பதற்கு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு நீட் என்ற தேர்வை கொண்டு வந்தது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நீட் தேர்வு எழுதும் முன்பு, மாணவர்களிடையே பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். இந்த சோதனைகளை தொடர்ந்தே மாணவர்கள் தேர்வறையில் தேர்வெழுத முடியும்.

இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக்கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தாய் மற்றும் தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த உதித் சூர்யாவின் தந்தை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.