60 நாட்களாக மோசமான துர்நாற்றம்.. தாய் மற்றும் சகோதரி சடலத்தோடு வசித்த பெண்..!

870

உத்திரபிரதேச மாநிலத்தில் இறந்த தாய் மற்றும் சகோதரிகளின் சடலத்துடன் வசித்து வந்த பெண். இது குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில் புஷ்பா தனது மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த 1990ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தனது 3 மகள்களுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். வீட்டு வேலை பார்த்து தனது மூன்று மகள்களையும் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்பாவின் மகளான ரூபா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த அதிர்ச்சியில் மூவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

தனது மகளை பறிகொடுத்துவிட்டு புஷ்பா மிகுந்த மனவேதனையில் வீட்டைவிட்டு அதிகமாக வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து சில நாட்கள் சென்றதும் அதிகப்படியான துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் இரு உடல்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அவர்களது உடல் அருகே ஒரு பெண் தூங்கிக் கொண்டு இருப்பதையும் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பெண் புஷ்பாவின் மகளான தீபா என்பதை உறுதி செய்தனர்.

தனது தாய் மற்றும் சகோதரி இறந்தது கூட தெரியாமல் தீபா அவர்களுடன் வசித்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் தீபாவை மீட்ட காவல்துறையினர் அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து இறந்த உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர்களின் இறப்பு குறித்து தகவல் வெளியிடப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of