உத்தரகாண்ட மாநிலம் பகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கருடா பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷி. வழங்கறிஞராக இருக்கும் இவர், மதுவிலக்கு அமல் படுத்தக்கோரி, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் மற்றும் நீதிபதி அலோக் குமார் வர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுவை படிப்படியாக குறைக்கும் கொள்கை முடிவுகளை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இதற்காக ஆறு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளதாகவும் மனுதாரர் ஜோஷி தெரிவித்தார்.