உத்தரகாண்ட் : அடுத்த 48 மணி நேரத்திற்கு பெருமழை எச்சரிக்கை

842

உத்தரகாண்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பேரா பெருமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து 3-வது நாளாக பெய்யும் பலத்த மழையால் பல மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

உத்தரகாண்ட்டில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாகவும், நெல் மற்றும் பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கியும் நாசமாகியுள்ளன.

குறிப்பாக கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி பகுதிகளில் பெய்த கனமழையால் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர்.

மேலும் ஆற்றின் கரையோரங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அடுத்த 48 மணி நேரத்திற்கு உத்தரகாண்ட்டில் வரலாறு காணாத அளவுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement