உழவர்கள் நலனுக்காக ’உழவன் செயலி’ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்

664

விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக உழவன் செயலி சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி  வைத்தார்.

விவசாயிகளின் நலனிற்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட உழவன் செயலியின் புதிய சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உழவன் செயலி மூலம் விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக அமையும் என கருதப்படுகிறது. மேலும், கைபேசி செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் 1800 420 0100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of