வாரிசு அரசியலுக்கு செக் வைத்த ஸ்டாலின்! அப்சட்டான நிர்வாகிகள்!

389

திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேச மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்டக் கட்சிகள் ஆகியக் கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகியுள்ளது.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு திமுக 20 தொகுதிகளில் நிற்கிறது.

கூட்டணி உறுதியடைந்துள்ள நிலையில் தற்போது கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர் தேர்வில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் பல தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.

இதனால் திமுக போட்டியிட இருக்கும் பெரும்பாலான தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாரிசுகளுக்கு சீட் கேட்டு வருபவர்களிடம் சீட் வேண்டுமென்றால் தேர்தல் செலவுகளுக்காக கட்சியிடம் இருந்து நிதி எதிர்பார்க்காதீர்கள்.

நீங்களே செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கட்சியின் நிர்வாகிகள் அப்சட்டாகி உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of