புதுக்கோட்டை, நாகை, உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

699
Holiday

புதுக்கோட்டை, நாகை, உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் திருவாரூர், கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் உருக்குலைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை கோட்டத்தில் மறுசீரமைப்பு பணிகளை பொறுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுத்து கொள்ளலாம் என்றும், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கல்வியாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதேப்போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மற்றும் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  விடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of