பொதுமக்களுக்கு தடுப்பூசி எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு..!

1188

டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில், உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதையடுத்து, வரும் 16-ஆம் தேதி முதல், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, இந்தியா முழுவதும் உள்ள 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கும், அதன்பின் 27 கோடி பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறிய மத்திய அரசு, கோவிஷீல்டு, கோவேக்ஷின் ஆகிய தடுப்பு மருந்துகளை பயன்படுத்தவே அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement