அடுத்தாண்டு முதல் பெருந்தொற்று தடுப்பூசி கிடைக்கும்? – ஜான்சன் அண்ட் ஜான்சன்

135

ஜனவரி மாதம் முதல் பெருந்தொற்று தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெருந்தொற்று நோய்க்கு முடிவு கட்ட இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கி, அதன் சோதனை பல கட்டங்களாக நடந்து வருகின்றன. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2-ம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜனவரி முதல் பெருந்தொற்று தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement