சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்..!

292

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி(42).

இதையடுத்து, காமெடியில் கலக்குவது எப்படி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டிருக்கிறார்.

வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement