வடிவேலுவின் “மாமா”விற்கு தடை? யார் தடை செய்தார்கள்?

430

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன்-வடிவேலு கூட்டணியில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் துவங்கிய 10 நாட்களில் நின்றுபோனது.

இதற்கு வடிவேலுவிற்கும், இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்திற்காக போடப்பட்ட பலகோடி ருபாய் மதிப்புள்ள செட் வீணாகிப்போனது.

தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த பிரச்சனை பற்றி ஷங்கர் புகார் அளித்த நிலையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்கிற படத்தில் நடிப்பதாக கூறி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. அது பற்றி அறிந்து தயாரிப்பாளர் சங்கம், இயக்குனரை அழைத்து பேசி படத்திற்கு தடை விதித்துள்ளது.

மேலும் வடிவேலுவை அணுகிய மற்ற இயக்குனர்களையும் அழைத்து பேசி தடை போட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of