ஓய்ந்தது பிரச்சனை..! எழுந்தது புயல்..! வைகைப்புயலின் 2nd இன்னிங்ஸ் அதிரடியாக ஆரம்பம்..!

864

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹரோவாக நடித்த முதல் திரைப்படம் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி. இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

ஆனால் இயக்குநருக்கும், வடிவேலுவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த படத்திற்கு செலவான தொகையை திரும்பித் தரும் வரை மற்ற படங்களில் நடிக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் அந்த பிரச்சனை முழுவதுமாக தீர்க்கப்பட்டு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது, இந்நிலையில் வடிவேலு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் என்று நான்தான் நடிக்காம இருந்தேன். ஆனால், இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை.

எனது அடுத்த பட வேலைகளை செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்போறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.

அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. பிச்சு உதறப்போறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement