வைகை ஆற்றில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…, 2 குவாரிக்கு தடை

120

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குடிநீருக்கு அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மணல் கடத்தும் கும்பலை போலீசார் பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை என்று பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்நிலையில், மதுரை சோழவந்தான் பகுதியில் வைகை ஆற்று படுகையில் 2 சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. அந்த மணல் குவாரிகளை எதிர்த்து மதுரையை சேர்ந்த வீரமணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் சட்டவிரோத செயல்பட்டு வரும் 2 மணல் குவாரிகளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகின்ற 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.