இந்தி மொழி… காக்கை தேசிய பறவை… – அண்ணாவின் கூற்றை நினைவுகூறி கண்டனம் தெரிவித்த வைகைச்செல்வன்

733

அதிகமானோர் பேசுவதால் மட்டுமே, ஹி்ந்தி தேசியமொழி என்றால் காக்கைதான் இந்தியாவின் தேசியப்பறவையாக இருக்கமுடியும் என்று அறிஞர் அண்ணாவே தெரிவித்துவிட்டதாக, அமித்ஷாவுக்கு, அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக -வின் செய்தித்தொடர்பாளருமான வைகைச்செல்வன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், அமித்ஷாவின் ஒரே நாடு, ஒரே மொழி, குறித்து பதில் அளித்துள்ளார்.

அதில், அதிகமான மக்கள் பேசுவதால் ஹிந்திதான் தேசியமொழி என்றால், காக்கைதான் இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கமுடியும் என்று அறிஞர் அண்ணா தெரிவித்திருப்பதை நினைவூட்டியுள்ளார்.

இந்திமொழியை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதற்கு எதிராக, வைகைச்செல்வன் கருத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.