“காங்கிரஸ் முதல் குற்றவாளி” – காங்கிரஸை விளாசி அமித்ஷாவை அம்பலப்படுத்திய வைகோ..!

703

கடந்த 2006ம் ஆண்டு, மதிமுகவை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி உடைக்க முயன்றதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதாக அரசு சார்பில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக, வைகோ நேரில் ஆஜரானார்.

விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காஷ்மீரில் காங்கிரஸ் ஏன் பொது வாக்கெடுப்பை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். 

நேரு பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா சார்பில் ஐநாவில் பங்கேற்ற அதிகாரிகள், காஷ்மீரில் 3 பொதுத்தேர்தல்கள் நடத்தியிருக்கிறோம் என்றும், அதுதான் பொதுத்தேர்தல் என மோசடி அறிவிப்பை தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் நட்பு, நன்றி இவை இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை என கடுமையாக சாடிய அவர்,

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சிறைவைக்கப்படவில்லை என மத்திய அரசும் அமித்ஷாவும் சொல்வது பொய் எனவும் வைகோ விமர்சித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of