பிரதமர் மோடியை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் வைகோ

356

ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் 20 நிமிடங்களுக்கு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது பிரதமர் மோடிக்கு காஞ்சிப் பட்டு ஆடையை வைகோ அணிவித்தார்.மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் மோடிக்கு அவர் வழங்கினார்.  திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அப்போது மோடியிடம் வைகோ கேட்டுக் கொண்டார். மேலும் கோரிக்கை மனு ஒன்றையும் மோடியிடம் வழங்கினார்.

அதில் உள்நாட்டு ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னல் ஆடைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  நியூட்ரினோ திட்டம், அணை பாதுகாப்பு மசோதா, கூடங்குளம் அணுக்கழிவு, மேகதாது அணை, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வைகோவின் கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக மதிமுக தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of