செய்தியாளர் கேட்ட கேள்வி! கொதித்தெழுந்த வைகோ!

678

கடந்த 2006ஆம் ஆண்டு மதிமுகவை உடைக்க அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முயற்சி செய்ததாக கூறி, அவருக்கு எதிராக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுந்தியிருந்தார்.

இந்த கடிதம் எழுதிய விவகாரத்தில், வைகோவுக்கு எதிராக திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வைகோவை விடுவிக்க ஆP, ஆடுயுக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து, வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், வைகோவை விடுவிக்க மறுப்பு தெரிவித்து வழக்கானது மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இன்று வைகோ ஆஜரானதை தொடர்ந்து, வழக்கு வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் கடும் கோபமடைந்த வைகோ, இப்படி என்னிடம் கேள்வி கேட்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவை எப்படி ஏனும் உடைக்க வேண்டும் என மத்திய சர்க்கார் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், இதற்கும் சேர்த்து தன் மீது வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of