குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த அரசு, குடிமக்களை பாதுகாக்க தவறிவிட்டது – வைகோ

534

குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த அரசு, குடிமக்களை பாதுகாக்க தவறிவிட்டது என, மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்ட பெண்களை கைது செய்தது, பாசிசத்தின் அடையாளத்தை காட்டுகிறது என்று குறிப்பிட்ட வைகோ, அரசுக்கு எதிராக மக்களின் மனங்கள் எழுந்து வருகிறது என்பதை, இந்த சம்பவங்கள் காட்டுகிறது என தெரிவித்தார்.

Advertisement