முகிலன் காணாமல் போனதற்கு முதல்வர் தான்..,! வைகோ ஆவேசம்!!

647

கோவை வந்த வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வைகோ கூறியதாவது:

“தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம், வன்முறை ஆகிய சம்பவங்களுக்கு முழு காரணம் போலீசும், இந்த அரசும் தான் என்பதை காணொலி ஆவணங்களுடன் முகிலன் வெளியிட்டு இருக்கிறார். மேலும் பல புகைப்பட ஆவணங்கள் இருப்பதாக முகிலன் கூறியிருக்கிறார்.

vaiko

சென்னையில் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்ட அவர் இன்று வரை காணவில்லை. அவர் எங்கியிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி வரும் 2ம் தேதி அனைத்து தரப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

அதற்காக அன்றைய தினம் மதிமுக அறிவித்திருந்த உயர்நிலை செயல்திட்ட கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 12 நாட்கள் கடந்தும் முகிலன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் காணாமல் போனதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு.

vaiko 4

முகிலனை கண்டுபிடித்து தரவேண்டுமானால் காவல்துறையில் புகார் தர வேண்டும் என்று தமிழக அரசு கூறுகிறது. முகிலன் குடும்பத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரை கண்டுபிடிக்குமாறு ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

vaiko 2

கஜா புயல் விவகாரத்திலும் தமிழகத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்திருக்கிறது. எனவே, தொடர்ந்து தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் போது கருப்புக் கொடி காட்டுவோம். அறவழியில் இந்த போராட்டம் நடைபெறும்”

vaiko-1இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of