ஒரு வாக்கு கூட அளிக்க கூடாது!! வைகோ தாக்கு!!

594

தமிழகத்தில் நாசக்கார திட்டங்களை கொண்டு வரும் பாசிச ஆட்சிக்கு மக்கள் ஒரு வாக்கு கூட அளிக்கக் கூடாது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் திராவிட கழகத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, ஏழ்மையில் வாழும் மக்களுக்கு பணம் அவசியம் என்பதை குறிப்பிட்ட அவர், 10ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் வாக்கை விற்றுவிடாதீர்கள் என கேட்டுகொண்டார்.

வரும் தேர்தலில் மக்கள் விரோத பாசிச கூட்டணிக்கு ஒரு வாக்குக் கூட அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of