அள்ளி வீசப்பட்ட வெள்ளிக்காசு வெற்றியை தீர்மானித்துள்ளது | Vaiko | By Election

261

ஆளும் கட்சியின் அதிகார பலமும், அள்ளி வீசப்பட்ட வெள்ளிக் காசுகளும் வெற்றியை தீர்மானித்துள்ளது என்று
மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அரசு இயந்திரம் முழுமையாக ஆளுங்கட்சியின் பக்கம் துணை நின்றது என குற்றம்சாட்டியுள்ளார். இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனோநிலையை காட்டுவதாக கருதிவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் அதிகார பலமும், அள்ளி வீசப்பட்ட வெள்ளிக் காசுகளும் வெற்றியை தீர்மானித்துள்ளது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் கடந்த தேர்தலை விட பாஜக குறைந்த இடங்களையே பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of