கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

563

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை சின்மயி வெளியிட்டார்.

இதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று வைரமுத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of