வைரமுத்துவை கண்ணீர் சிந்த வைத்த கொலை குற்றவாளி..!

2464

கோவை மாவட்டத்தை சேர்ந்த பாதமுத்து என்பவர், கொலை குற்றத்திற்காக, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர், சிறையில் புத்தகங்கள் படிப்பதிலும், ஓவியம் வரைவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், மறைந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பாடலாசிரியர் வைரமுத்துவும் ஒன்றாக நிற்பதைப் போன்ற ஓவியம் ஒன்றை பாதமுத்து வரைந்துள்ளார்.

மேலும், இந்த ஓவியத்தை சிறைத்துறை கண்காணிப்பாளர் பழனி அனுமதியுடன், வைரமுத்துவிற்கும் அனுப்பியுள்ளார்.

இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட வைரமுத்து, எஸ்பிபியும், நானும்… மதுரை மத்திய சிறைக்கைதி பாதமுத்துவின் கைவண்ணம் கண்டேன், கண்ணீர் கொண்டேன். சிறை செய்ய முடியுமோ சித்திரத்தை? நன்றி என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement