“கலைஞருடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்..” வைரமுத்துவின் ஆவேச உரை..

282

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நகர்மயமாதல் நிகழ்ந்துள்ளது என்றும், இந்தப் பெயரைப் பெறுவதற்கு திராவிட முன்னோடிகள், ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

8, 9 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அதிகாரம் மறுக்கப்பட்டு, அதிகாரம் சிதைக்கப்பட்ட ஒரு இயக்கத்தை, இவ்வளவு உயரமாக கட்டியெழுப்ப முடியும் என்றால், அது கருணாநிதியின் தனித்திறமை. ஸ்டாலினின் தனித்திறமை என்று நினைக்கிறேன் எனவும் வைரமுத்து தெரிவித்தார்.

மேலும், கருணாநிதியுடன், ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள் என்று கூறிய அவர், ரோஜாவோடு ரோஜாவை கூட ஒப்பிடாதீர்கள். இரண்டுபேரும் ஒவ்வொரு உயரம்.. கலைஞர் காலத்தில் ஆரியம் மற்றும் டெல்லி இரண்டும்தான் எதிரிகள். இன்று காலம் மாறி உள்ளது. தமிழகம் துண்டாடப்படுகிறது என்று வைரமுத்து தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of