இளையராஜாவை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து! ஏன் தெரியுமா..?

822

இயக்குநர் சிகரம் என்று போற்றப்படுவர் இயக்குநர் கே. பாலசந்தர். அனைவராலும் கே.பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், பல்வேறு திரைப்படங்களின் மூலம் மக்களின் உணர்வுகளை அழகாக பதிவு செய்தவர்.

இந்த மகா கலைஞன் கடந்த 2014ஆம் ஆண்டும் டிசம்பர் 23-ஆம் தேதி அன்று மறைந்தார். இந்நிலையில் பாலசந்தரின் உதவியாளரான மோகன் கே பி 90 என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பாலச்சந்தர் குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன்.

காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது. அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை.

அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார். பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை. மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான். மீண்டும் களம் எனக்கு வந்தது.

திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர். புன்னைகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர்.

பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும்”

என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of