இந்தி கட்டாயம் எதிரொலி! வைரமுத்துவின் ஆதங்க டுவீட்!

930

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ரமேஷ் போக்ரியால் நேற்று பதவியேற்றார். இந்நிலையில், கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு அவரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், நாட்டில் உள்ள கல்வியமைப்பை நிலையாக மேம்படுத்துதல், அமல்படுத்துதல் உள்ளிட்டவகளை செய்யக்கூடிய வகையில், ஒரு புதிய உச்ச அமைப்பை உருவாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் தங்களின் கட்டண அமைப்பை தாங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்றும், ஆனால் தன்னிச்சையாக கட்டணத்தை அதிகரிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தி மொழியில்லாத அனைத்து மாநிலங்களிலும், இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாடலாசிரியர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியை தினிக்கக்கூடாது என்பது நேருவின் வாக்குறுதி. மத்திய அரசுக்கு நேருவை பிடிக்குமோ, பிடிக்காதே தெரியாது. ஆனால் நேருவின் வாக்குறுதி பிடிக்காமலிருக்கக்கூடாது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement