தமிழிசைக்கு ஆளுநர் பதவி..! வைரமுத்து சொன்ன அந்த வார்த்தைய கேட்டீங்களா..?

1944

தமிழக பாஜகவின் தலைவராக, இல்லை இல்லை தமிழக பாஜகவின் தூனாகவே இருந்தவர் நம் தமிழிசை சௌந்திரராஜன் அக்கா. அந்த அளவிற்கு தமிழக பாஜகவிற்கு உழைப்பை கொடுத்தவர் தமிழிசை.

எந்த இடங்களுக்கு சென்றாலும், தாமரை மலரும், தாமரை மலரும், தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்ட தண்ணி தீர கத்தியவர் தமிழிசை. இவரிடம் இருந்து பாஜக நல்ல வேலை வாங்கிக்கொண்டு, தகுந்த பதவி தராமல் ஏமாற்றுகிறது என்றும் அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், கட்சிக்காக பாடுபட்ட இவருக்கு, தற்போது ஒரு விடிவுக்காலம் பிறந்துள்ளது. ஆம், தமிழிசைக்கு தெலுங்கானாவின் ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. ஒரு தமிழ் பெண், தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்பதற்கு, நம் அணைவரும் பெறுமைப்பட வேண்டும்.

பல முக்கிய தலைவர்கள் தமிழிசை சௌந்திரராஜனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், “ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும், தெலுங்குக்கும் இசை பாலமாக விளங்கும் என்று நம்புகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of