புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் சட்டப்பேரவை தலைவர் வைத்திலிங்கம் ஆய்வு

924

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், காமராஜ் நகர் பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிக குடியிருப்புகளை சட்டப்பேரவை தலைவர் வைத்திலிங்கம் ஆய்வு செய்தார்.

அப்போது மழை காலத்திற்கு முன்பே கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யவேண்டும், தாழ்வான பகுதியில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அங்குள்ள சாலைகளை மேம்படுத்தும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது உழவர்கரை நகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை, மின் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement