”வாஜ்பாய்” பிரதமராக வேண்டும் – உளறிய ராமதாஸ்

772

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது, பிரச்சாரக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தலைவர்களின் உளறல்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து, செஞ்சி பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தாங்கள் அமைத்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும், காங்கிரஸ் கட்சிக்கு நாட்டிற்கு தேவையில்லாத கட்சியாக போய்விட்டது எனவும் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று ராமதாஸ் பேசியதால், பிரச்சாரக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of