“அட்லிக்கே அல்வாவா..” திருடப்பட்டதா அஜித்தின் வலிமை டைட்டில்..? பொங்கும் விஜய் ரசிகர்கள்..!

555

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் அட்லி. தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களை இவர் கொடுத்திருந்தாலும், இவர் பழைய படங்களின் கதையை சிறிதளவு மாற்றி படங்களை இயக்கிய வருகிறார் என்று பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தற்போது புதிய தகவல் ஒன்றை பரப்பி வருகின்றனர். அது என்னவென்றால், தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூரரைப்போற்று என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் பெயரை திருடி தான், சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரைப்போற்று திரைப்படத்தின் பெயரை வைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாது, அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வலிமை என்ற பெயரும் இருப்பதால், அஜித் படத்தின் டைட்டிலும், இதிலிருந்து தான் திருடப்பட்டது என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of