தனுஷ் பாடிய “டாட்டா பாய்-பாய்” பாடல் வெளியீடு

336

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் தனுஷ் பாடியுள்ள பாடலை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் எம்.ராஜேஷ். பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர் தற்போது இயக்கிவரும் ‘வணக்கம்டா மாப்ள படத்தில் ஜிவி பிரகாஷ், அம்ருதா ஐயர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஒரு பாடலான ‘டாடா பாய் பாய்’ பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். ’என் லவ்வு ஒரு டாப்பு கிழிஞ்ச ஷேர் ஆட்டோ, என தனுஷ் அவரது குரலில் பாடியுள்ளார். நிச்சயம் இந்த வருட பாடல்களில் டாடா பாய் பாய்க்கும் இடமுண்டு. ஆனால், ஏற்கெனவே வெளியான பல குத்துப் பாடல்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement