அய்யோ… அத பத்தி கேக்காதீங்க” – ரசிகர்களின் கேள்விக்கு ஓட்டம்பிடித்த வனிதா…

528

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தார்.

நேற்று லைவ்வாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் வனிதா. அப்போது லாஸ்லியாவுக்கு ஆதரவாக பேசினார். மேலும் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார் வனிதா.


குறிப்பாக தர்ஷனுக்கு எதிராக இருந்தது அவரது கருத்துக்கள். இதில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியையும் இழுத்துவிட்டார் வனிதா.

வனிதாவின் பதிலால் அதிருப்தியடைந்த சனம், அவர் சொல்வதை நம்ப வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் வனிதாவுக்கும் வீடியோ வாயிலாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பாக தான் கருத்து தெரிவித்த டிவிட்டுகளை நீக்கினார் வனிதா. மேலும் பிக்பாஸ் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தனக்கு ஆர்வமில்லை.

எல்லா போலி நாடகங்களுடனும் இருந்துவிட்டேன். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி, இதில் நீங்கள் மிகவும் ஈடுபாடு கொண்டு உங்கள் தலையை உடைத்துக்கொள்கிறீர்கள். யாரும் யாருடனும் சண்டை போட வேண்டாம். எனக்கு உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கிறது.

டிவிட்டரில் அதிகமாக நெகட்டிவிட்டி இருக்கிறது. பல பிரபலங்கள் விலகி இருக்க விரும்புவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் குறித்த எனது கருத்துக்கள் குறித்த ட்வீட்களை நான் நீக்கிவிட்டேன்.

வெறுப்பை பரப்புவதிலோ அல்லது எங்கள் ஆர்மியினர் மற்றும் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதையோ ஊக்குவிப்பதில் எனக்கு உண்மையில் ஆர்வம் இல்லை. நேரம்தான் வீணாகிறது. வொர்த் இல்ல. இவ்வாறு வனிதா விஜயகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of